Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவ்னி மோடிக்கு ஸ்ட்ராபெரி கைகொடுக்குமா?

27 மே, 2015 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Will-Strawberry-give-success-to-Avini-modi

குஜராத்தை சேர்ந்த மாடல் அழகி அவ்னி மோடி. பிரதமர் நரேந்திர மோடியின் உறவுக்கார பெண் அல்ல. அவர் பிறந்த மோடி குலத்தைச் சேர்ந்தவர் அவ்வளவுதான். குஜராத்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் பணம் கொழிக்கும் தெலுங்கு பட உலகம் பற்றி கேள்விப்பட்டு வந்தார். சர்வேஸ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.


சிறிய இடைவெளிக்கு பிறகு சரத்குமார் நடிப்பில் வெங்கடேஷ் இயக்கிய சண்டமாருதம் படத்தில் நடிப்பதாக இருந்தார். பின்னர் திடீரென அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். இதற்கு என்ன காரணம் என்று தெரியாது. என்றாலும் வேடிக்கையான காரணம் ஒன்றை சொல்வார்கள். சண்டமாருதம் பட பூஜையின் போது பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவ்னி மோடி, சும்மானாச்சுக்கும் பிரதமர் நரேந்திர மோடி என் தூரத்து சொந்தம் என்று சொல்லி வைக்க... மீடியாக்கள் நரேந்திர மோடி உறவினர் நடிக்கும் படம் என்று செய்திகள் வெளியிட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சரத்குமார். அப்போது அ.தி.மு.கவும், பாரதிய ஜனதாக கட்சியும் எதிர்எதிர் திசையில் நின்றதால் அவ்னி மோடியை நடிக்க வைத்தால் அம்மாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று பயந்து அவ்னி மோடியை நீக்கிவிட்டாக சொல்வார்கள்.


அதன் பிறகு குஜராத்தி படங்களுக்கே திரும்பி விட்ட அவ்னிமோடியை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் பாடலாசிரியர் பா.விஜய். அவர் நடித்து இயக்கும் ஸ்ட்ராபெரி படத்தில் அவ்னி மோடிதான் ஹீரோயின். அழகான பிசாசாக நடித்திருக்கிறார், இந்தப் படம் தனக்கு தமிழில் நல்ல இடத்தை பெற்றுத் தரும் என்று நம்புகிறார் அவ்னிமோடி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in