ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான வரலாற்று படைப்பான பாகுபலியின் ட்ரைலர் வரும் மே 31ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நாளில் அந்த படத்தின் ஆடியோவும் ரிலீஸ் செய்யப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் பாகுபலியின் ஆடியோ ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றம் கண்டு வருகின்றது. இந்நிலையில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வரும் மே 31ம் தேதி ரிலீஸ் ஆகின்றது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதிலும் மாற்றம் வருமா என்ற சந்தேகம் டோலிவுட் வட்டாரங்களில் இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த ட்ரைலருக்கு சென்சர் போர்டு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதன் மூலம் அன்றைய நாளில் பாகுபலியின் ட்ரைலர் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அந்த ட்ரைலர் சுமார் 125 வினாடிகள் ஓடக்கூடியது ஆகும்.