பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நந்திதா நடிக்கும் புதிய படம் காத்திருப்போர் பட்டியல். அவருக்கு ஜோடியாக சச்சின் நடிக்கிறார். சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்தவர். இவர்கள் தவிர அப்புக்குட்டி, செண்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி நடித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். மரியான் இயக்குனர் பரத்பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜசேகர் இயக்குகிறார்.
"இது ரெயில்வே போலீசை மையமாக கொண்ட கதை. ஹீரோயினுக்கு நாளை பாண்டிச்சேரியில் கல்யாணம், அதை தடுத்து நிறுத்த ஹீரோ சென்னையிலிருந்து செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது செய்யாத குற்றத்துக்காக ரெயில்வே போலீஸ் அவரை கைது செய்கிறது. அவன் அவர்களிடமிருந்து தப்பி காதலி திருமணத்தை தடுத்து நிறுவத்துவம் அவனை பிடிக்க ரெயில்வே போலீஸ் போராடுவதும்தான் கதை." என்கிறார் இயக்குனர் ராஜசேகர்.