பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில், என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில், நடிகர் கல்யாண் ராம் தயாரித்துள்ள கிக் 2 படத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இப்படம் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் திரையிடும் தேதி மாற்றப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது. படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்துள்ளது. இப்படம் ஜூன் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.