பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
இந்த மாதம் முன்னணி ஹீரோக்களான கமல்ஹாசன் நடித்த 'உத்தம் வில்லன்', ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் இணைந்து நடித்த 'புறம்போக்கு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இப்படங்களை தொடர்ந்து இந்த வாரம் சூர்யா நடித்துள்ள 'மாஸ்' என்கிற 'மாஸு என்கிற மாசிலாமணி' என்கிற 'மாசு என்கிற மாசிலாமணி' படம் வெளிவரவிருக்கிறது.
இந்த மாதம் முன்னணி ஹீரோக்களின் மாதம் என்றால்... அடுத்த மாதம் காமெடி ஹீரோக்களின் மாதமாகிவிட்டது. யெஸ்... ஜுன் மாதத்தில் காமெடியன்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் சூர்யாவின் 'மாசு என்கிற மாசிலாமணி' வரும் வெள்ளிக் கிழமையன்று வெளியாகிறது. இந்த படத்துக்குப் பிறகு பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் எதுவும் ரிலீஸுக்கு தயாராக இல்லை. இப்படியொரு சூழலை பயன்படுத்திக் கொள்ளும்வகையில் காமெடி நடிகர்கள் வடிவேலு, சந்தானம், விவேக் ஆகியோர் ஹீரோக்களாக நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கிறது.
இந்த வரிசையில் முதல் வெளியீடு வடிவேலு, சதா ஜோடியாக நடித்து, யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள 'எலி' படம்தான். இப்படம் ஜூன் 5-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள 'இனிமே இப்படித்தான்' படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகிறது. இந்த லிஸ்ட்டில் கருணாஸ் ஹீரோவாக நடித்து வருடக்கணக்கில் முடங்கிக்கிடக்கிற லொடுக்கு பாண்டி படமும் சேர வாய்ப்பிருக்கிறது.