தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில், தெலுங்கிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடித்து வருகின்றனர். இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தமான ஸ்ருதிஹாசன் சில பிரச்னைகளால் படத்திலிருந்து விலகினார். தற்போது இப்படத்தில் நாயகியாக தமன்னா நடித்து வருகின்றார். மேலும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள இப்படக்குழு தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் இயக்குநர் வம்சி இயக்கி வரும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழில் இஞ்சி இடுப்பழகி பெயரிலும் தெலுங்கில் ஜீரோ சைஸ் என்ற பெயரிலும் பிவிபி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அனுஷ்கா ஆர்யாவிற்கு ஜோடியாக நடிக்கின்றார்.மேலும் இப்படத்தில் நாகார்ஜுனா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளது குறிப்பபிடதக்கது.