திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். கனடா நாட்டை சார்ந்த ஆபாச நடிகையான இவர், பாலிவுட்டில் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியபோது தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லையாம். இந்தசூழலில் நடிகை செலினா ஜெட்லி, தன்னுடைய வீட்டில் அவரை வாடகைக்கு தங்க வைத்தார். இந்நிலையில் வாடகைக்கான ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் சன்னி லியோன் அங்கு தங்கியதாகவும், செலினா வீட்டை காலி பண்ண சொல்லியும், சன்னி லியோன் மறுத்தாகவும், அதனால் அவரை வீட்டை விட்டு செலினா வௌியே துரத்தி விட்டதாகவும் பாலிவுட்டில் கடந்த சில தினங்களாக செய்தி பரவியுள்ளது. ஆனால் இதனை நடிகை சன்னி லியோன் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, கடந்தாண்டு நான் ஜூகு பிளாட்டில் தங்கியிருந்தேன். மிகவும் அழகான பிளாட் அது. எங்களுக்கான குத்தகை காலம் முடிந்தவுடன் நாங்கள் அந்த வீட்டை விட்டு வௌியேறி விட்டோம். மற்றபடி செலினா என்னை வீட்டை விட்டு துரத்தியதாக வந்த செய்திகள் எல்லாம் முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.