தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் 31 வருடங்களாக வெற்றிகரமான முன்னணி இயக்குனராக பவனி வருபவர் ஷாஜி கைலாஷ். மோகன்லாலை வைத்து ஒன்பது படங்களையும் மம்முட்டியை வைத்து ஏழு படங்களையும் இயக்கியுள்ளார். மோகன்லாலின் எவர்கிரீன் ரெக்கார்டுகளான 'ஆறாம் தம்புரான்', 'நரசிம்ஹம்', 'பாபா கல்யாணி' ஆகியவை ஷாஜி கைலாஷின் கைவண்ணத்தில் உருவானவை தான். ஆனாலும் ஷாஜி கைலாஷின் பேவரைட் ஹீரோ என்றால் அது சுரேஷ்கோபி தான்..
அவரை வைத்து 16 படங்களை இயக்கியுள்ள ஷாஜி கைலாஷ், 1992லிருந்து 1996 வரை சுரேஷ்கோபியை மட்டுமே வைத்து தொடர்ந்து ஏழு படங்களை இயக்கி சாதனை படைத்துள்ளார். சொல்லப்போனால் நம்ம கேப்டனுக்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் போல, சுரேஷ்கோபியின் காட்பாதர் ஷாஜி கைலாஷ்தான். கடைசியாக இவர்கள் இருவரும் 'தி கிங் அன்ட் கமிஷனர் படத்தில் இணைந்து பணியாற்றினார்கள்.
இப்போது மீண்டும் தங்களது 17வது படத்தில் இணைந்து அசத்தவுள்ளார்கள். கேரளாவின் இப்போதைய அரசியல் களத்தை வைத்து உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு 'தி ஸ்டேட்' என பெயர் வைத்துள்ளார்கள். தற்போது தமிழில் ஆர்.கே நடித்துவரும் 'வைகை எக்ஸ்பிரஸ்' படத்தை முடித்ததும் இந்தப்படத்தின் வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார் ஷாஜி கைலாஷ்.