'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த ஈராஸ் நிறுவனம், தற்போது ஆர்.வி.பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிறு பட்ஜெட் படங்களையும் தயாரிக்க முன்வந்திருக்கிறது. இந்த ஆண்டு அசோக் செல்வன், நடிக்கும் பிறை தேடிய நாட்கள் என்ற படத்தையும், நட்டி என்கிற நட்ராஜ், சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் என்கிட்ட மோதாதே படத்தையும் தயாரிக்கிறது. இரண்டு படங்களையும் குறுகிய காலத்தில் தயாரித்து இந்த ஆண்டு டிசம்பருக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறது.
எங்கிட்ட மோதாதே படத்தை விடியும் முன் படத்தின் இணை இயக்குனராக பணியாற்றிய ஆப்ரகாம் பிரபு இயக்குகிறார். அசோக் செல்வன் தவிர மற்ற நடிகர் நடிகைகள் டென்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. எங்கிட்ட மோதாதே படத்தை பாண்டிராஜ் உதவியாளர் ராமு செல்லப்பா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனகாபுத்தூர் வெல்கோ திரையரங்கில் தொடங்கியது. தற்போது புலி படப்பிடிப்பில் இருக்கும் நட்ராஜ் இன்னும் சில நாட்களில் முழுவீச்சில் இதன் படப்படிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.