Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசனால் முடிவது, ரஜினிகாந்தால் முடியாதது ஏன்.?

26 மே, 2015 - 13:36 IST
எழுத்தின் அளவு:
How-Kamal-did.?-Why-Rajini-can-not-do.?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இன்றைய தமிழ்த் திரையுலகில் சீனியர் சூப்பர்ஸ்டார் நடிகர்கள். இருவரும் ஒரே கால கட்டத்தில் நாயகர்களாக உயர்ந்து தங்களுக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 வருடங்களாக முன்னணி நடிகர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் இன்றும் அவருடைய ஸ்டைலில் அசத்த, கமல்ஹாசன் இன்றும் அவருடைய நடிப்பு மற்றும் முத்தத்தில் அசத்த தங்களை இளம் நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கும் மெருகேற்றி வைத்திருக்கிறார்கள்.


2000 ஆண்டு வரை குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு படங்களாவது கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் 'பாபா' படத்திற்குப் பிறகு மூன்று வருட இடைவெளியில் 'சந்திரமுகி' படத்தில் நடித்தார். அடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 'சிவாஜி' படத்தில் நடித்தார். மீண்டும் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 'எந்திரன்' படத்தில் நடித்தார். அடுத்து நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு 'கோச்சடையான், லிங்கா' ஆகிய படங்களில் நடித்தார். 'லிங்கா' படம் வந்து 5 மாதங்களாகியும் ரஜினியின் அடுத்த படம் பற்றி வதந்திகளும், தகவல்களும் மட்டுமே உலா வந்து கொண்டிருக்கின்றன.


ஆனால், கமல்ஹாசன் 'உத்தம வில்லன்' படம் வந்து தோல்வியடைந்தாலும் அடுத்த 25வது நாளில் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார். அடுத்த மாதம் அவருடைய 'பாபாநாசம்' வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களாகத்தான் கமல்ஹாசன் படத்துக்குப் படம் கொஞ்சம் நீண்ட இடைவெளி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த ஐந்து வருடங்களில் “மன்மதன் அம்பு, விஸ்வரூபம், உத்தம வில்லன்' ஆகிய படங்களே வெளிவந்தன. ஆனால், இந்த ஆண்டில் அந்த இடைவெளியை அப்படியே குறைத்து விட்டார். இந்த ஆண்டில் 'உத்தம வில்லன், பாபநாசம்', ஆகிய படங்களுக்குப் பிறகு “விஸ்வரூபம் 2, தூங்காவனம்” ஆகிய படங்கள் வெளிவர வாய்ப்புள்ளன.


'உத்தம வில்லன்' படம் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும்படி தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன். ஆனால், ரஜினிகாந்த் இன்னும் 'லிங்கா' படத்தின் தோல்வியிலிருந்து எழுந்து வராமல் இருக்கிறார். ரஜினிகாந்த் விரைவில் அவருடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களின் ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றுவாரா ?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in