நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார். ஸ்பெயினில் நடைபெற்ற இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இன்றோ நாளையோ படக்குழுவினர் ஐதராபாத் திரும்பவுள்ளனர். ஸ்பெயினில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பை நாகார்ஜுனா - அமலா தம்பதியினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பார்வையிட்டனர். இப்படத்தை இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கி வருகின்றார். தயாரிப்பாளர் நிதின் பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.