ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் கதாநயாகியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. தொடர்ந்து “அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை” ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி உட்பட பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். அறிமுகமான 'வாரணம் ஆயிரம்' படத்தில்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அதன் பின் அவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்விப் படங்களாக அமைந்தன.
2014ம் ஆண்டு அக்ஷய் வார்டி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். சமீரா ரெட்டிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.