டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மறைந்த பழம்பெரும் நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆர் அவர்களின் பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அறக்கட்டளையின் கீழ் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான என்.டி.ஆர் விருது பிரபல பின்னணி பாடகி சுனிதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று குண்டூரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ கலந்து கொண்டு பாடகி சுனிதாவிற்கு என்.டி.ஆர் விருது வழங்கி பாராட்டினார். திரைப்படங்களில் பாடல்கள் பாடுவது மட்டுமல்லாது சுனிதா முன்னணி நடிகைகள் பலருக்கு திரைப்படங்களில் பின்னணி பேசியுள்ளார். தான் என்.டி.ஆர் விருது வென்றதை மகிழ்ச்சியுடன் பாடகி சுனிதா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.