'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த ராக் என்ற படத்தின் போஸ்டர் தொடர்பான வழக்கில், நடிகை பூஜா பட்டுக்கு இப்போது மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.
நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் பூஜா பட். கடந்த 2005ம் ஆண்டு இவரது தயாரிப்பில் ராக் என்ற படம் வெளியானது. இப்படத்தில் தென் ஆப்பிரிக்க மாடல் அழகி எலினா ஹம்மான் நடித்திருந்தார். இப்படத்துக்கான போஸ்டர்களில் எலினாவின் படு கவர்ச்சிகரமான போஸ்கள் இடம் பெற்றிருந்தன. இதுஅப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பூஜா பட் அவரது நிறுவனமான பிஷ் ஐ, இணைத் தயாரிப்பாளர் சுஜித் சிங், அவரது நிறுவனமான ஷ்ரேயா கிரியேஷன்ஸ் ஆகியவை மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த பந்த்ரா கோர்ட் கடந்த 2008ம் ஆண்டு இவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இந்நிலையில் வினோத் ஜெயின் என்பவர் இந்த வழக்கை எதிர்த்து மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த மும்பை செஷன்ஸ் கோர்ட், பந்த்ரா கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் பூஜா பட்டுக்கு இப்போது மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.