'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தர்சகரத்னா தாசரி நாராயண ராவ் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களை எப்போதுமே சப்போர்ட் செய்வது வழக்கமாக கொண்டவர். எந்த விழாவில் கலந்துகொண்டாலும் அவர்களை புகழ்ந்து பேசுவார் சிறு பட்ஜெட் படங்களை சப்போர்ட் பண்றது மிக அவசியம் என்பார். சில நேரங்களில் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை பற்றி தேவை இல்லாமல் தூற்றுவதும் உண்டு. இந்த சிறு பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் தற்போது அதிசயமாக பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கபோகிறார். இந்நிலையில் தாசரியின் சிஷ்யரான பிரபல மொத்த நடிகரான மோகன்பாபு தன்னுடைய குருவின் வழியில் செயல்படுகிறார். சமீபத்தில் தன்னுடைய மகளும், நடிகை மற்றும் தயாரிப்பாளருமான லக்ஷ்மி மஞ்சு நடித்து, தயாரித்த தொங்காடா படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்டார். அப்போது அவர் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களைவிட சின்ன படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களே உண்மையான் தயாரிப்பாளர்கள் என்று கூறினார். அதுமட்டுமின்றி பெரிய தயாரிப்பாளர்கள் நடிகை நடிகர்களுக்கு சரியாக சம்பளம் தருவது இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.