தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த மந்த்ராவை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. குறிப்பாக அந்த படத்தில் மந்த்ராவாக நடித்த பிரபல நடிகை சார்மியின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது நினைவிருக்கலாம். அதனை தொடர்ந்து தற்போது மந்த்ரா 2 படத்தையும் எடுத்து முடித்து விட்டனர். இந்த படத்தை அறிமுக இயக்குனரான எஸ் வி சுரேஷ் இயக்குகிறார். கிரீன் மூவீஸ் நிறுவனத்தார் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படம் குறித்து தயாரிப்பாளர்கள் கூறும்போது, மந்த்ரா 2வில் பிரபல நடிகை சார்மி நடிக்க ஒப்புக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியாகும். அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம். இது மந்த்ராவின் இரண்டாம் பாகம் இல்லை. இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும். இந்த படத்திற்காக கிராபிக்ஸ் மற்றும் இதர துறை சார்ந்த விஷயங்களில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றோம், என்று கூறி உள்ளனர்.