ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடித்திருக்கும் படம் - 'இடம் பொருள் ஏவல்'. லிங்குசாமி தயாரித்துள்ள இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. விரைவில் வெளியாகும் இப்படத்தைத் தொடர்ந்து அதர்வாவை வைத்து தன் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் சீனு ராமசாமி. கதாநாயகி, மற்றும் உடன் நடிக்கும் நடிகர்கள், டெக்னீஷியன் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் விரைவில் அதிகாரபூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை என இதுவரை நான்கு படங்களில் நடித்திருக்கிறார் அதர்வா. இந்த நான்கு படங்களுமே கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. பாலாவின் இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டார் அதர்வா. இப்போது பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் சண்டிவீரன் படத்தில் நடித்து வரும் அதர்வா, ரவி அரசு இயக்கத்தில் ஈட்டி, டி.என்.சந்தோஷ் இயக்கத்தில் 'கணிதன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களுமே முடியும் தருவாயில் இருக்கின்றன. இப்படங்களைத் தொடர்ந்து அதர்வா நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது சீனு ராமசாமி இயக்கும் படத்தில் மட்டுமே.