‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்.
பொதுவாக நடிகர்களின் பிறந்தநாள் அன்று அவரது வீட்டைச்சுற்றி பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டுப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி இன்று பிறந்தநாள் காணும் கார்த்தியை வாழ்த்தும்வகையில் அவரது ரசிகர்கள் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அவற்றில் சொல்லி வைத்ததுபோல் பல போஸ்டர்களின் புரட்சிப்புயல் கார்த்தி என்று அடைமொழியோடு கார்த்தியை வாழ்த்தி உள்ளனர் அவரது ரசிகர்கள்.
இந்த புரட்சிப்புயல் பட்டம் பற்றி ஒரு ப்ளாஷ்பேக் உண்டு.
சூர்யா நடிக்க வந்த சில ஆண்டுகளில் அவரது ரசிகர் மன்றத்தினர் இதே புரட்சிப்புயல் பட்டத்தை சூர்யாவுக்கு வழங்கினர். அந்தப் பட்டம் சூர்யாவுக்கும் பிடித்துப்போக அதை அவரும் பயன்படுத்த ஆரம்பித்தார். அரசியல்களத்தில் இந்த புரட்சிப்புயல் பட்டம் பிரபல அரசியல்கட்சியின் இரண்டெழுத்து தலைவரை குறிக்கும். அவரது கட்சியினர்தான் புரட்சிப்புயல் பட்டத்தை பரவலாக பயன்படுத்தி வந்தனர்.
இந்தப்பட்டத்தை சூர்யா பயன்படுத்துவதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இது பற்றி சூர்யாவின் தந்தை சிவகுமாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். புரட்சிப்புயல் படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சிவகுமார்.