ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்பெல்லாம் நடிகர் நடிகைகள் மட்டுமே நடிப்பார்கள். ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டது. மற்ற துறைகளைச்சேர்ந்த டெக்னீசியன்களும் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பின்னணி பாடகர்கள், டான்ஸ் மாஸ்டர்கள் என பலரும் நடிகர்களாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், நடன மாஸ்டர்களை எடுத்துக்கொண்டால், பிரபுதேவா, ராஜூசுந்தரம், சிவசங்கர், ஸ்ரீதர், ஹரிகுமார் என பல டான்ஸ் மாஸ்டர்கள் சினிமாவில் நடித்து வருகிறார்கள். இந்த வரிசையில், தற்போது பிரபல டான்ஸ் மாஸ்டரான கல்யாணும் இணைந்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கும் கல்யாண் மாஸ்டர், சில பாடல்களிலும் தோன்றி நடனமாடியிருக்கிறார். இந்த நிலையில், தற்போது அருண்விஜய் -கார்த்திகா நடித்துள்ள வா டீல் என்ற படத்தில் அதிரடியான வில்லனாக நடித்துள்ளார். மிரட்டலான வில்லன் வேடம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு வில்லனாகவும் கல்யாண் மாஸ்டர் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது பர்பாமென்ஸ் இந்த படத்தில் வெளிப்பட்டிருக்கிறதாம்.