டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பவர்ஸ்டார் சீனிவாசன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார் என்றாலே அவர் சார்பாக ஒருகூட்டம் அந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆங்காங்கே உட்கார்ந்திருப்பார்கள். அதையடுத்து அவர் என்ட்ரி கொடுத்ததும் விடாமல் கைதட்டிக்கொண்டேயிருப்பார்கள். பின்னர், மேடையில் ஏறி சீட்டில் அவர் உட்கார்ந்த பிறகு நிறுத்துங்கள் என்று மெல்லமாக கையசைத்த பிறகுதான் அவர்கள் தட்டிய கையை நிறுத்துவார்கள். அப்படி பவருக்கு கிடைக்கிற கைதட்டலை பலர் தானாக கிடைத்தது என்று நினைத்துக்கொண்டாலும் சிலருக்கு அவரே ஆட்களை வைத்துதான் கைதட்டல் வாங்குகிறார் என்கிற சமாச்சாரம் தெரியும். அதனால் சந்தானம் உள்ளிட்டோர் நான் என்ன பவர்ஸ்டாரா ஆள் வச்சு கைதட்டல் வாங்குவதற்கு? என்று மேடையில் அவர் எதிரிலேயே சொல்லி அவர் தர்மசங்கடத்தில் தள்ளியிருக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக பலரும் இதை ரிபீட் செய்து வருவதால், இந்த வெட்டி பப்ளிசிட்டியெல்லாம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் பவர். அதனால் ரசிகர்கள் என்ற பெயரில் ஆள்திரட்டி வரும் வேலையை இப்போது நிறுத்தி விட்டார். அதனால் இப்போது பவர்ஸ்டார் எந்த சினிமா விழாக்களுக்கு வந்தாலும் அவருக்கு முன்பு போன்று கைதட்டல் கிடைப்பதில்லை. அதன்காரணமாக அவர் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை.
ஆனால் இந்த நிலையை அவரை கலாய்த்து வரும் நடிகர்களுக்கு தெரியவர, என்ன அண்ணே இப்பல்லாம் ஆள் திரட்டிக்கொண்டு போறதை நிறுத்திட்டீங்க போல இருக்கு? என்று அவருக்கு போன் போட்டு கேட்டு டென்சன் செய்கிறார்களாம்.