சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
2005ல் ஜித்தன் ரமேஷ் நாயகனாக அறிமுகமான படம் ஜித்தன். இந்த படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார். பூஜா நாயகியாக நடித்த அப்படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படமும் ஹிட்டானது. இந்த நிலையில், தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ராகுல் என்பவர் இயக்கி வருகிறார். வின்சென்ட் செல்வா கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். தற்போது ஜித்தன் ரமேசுடன் இனியா, ஸ்ருதி, தம்பி ராமைய்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை டைரக்டர் வின்சென்ட் செல்வாவேதான் தயாரித்து வந்தாராம். ஆனால், பாதி படம் வளர்ந்து விட்ட நிலையில், அப்படத்துக்கு பைனான்ஸ் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதாம். அதனால் தற்போது படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஜித்தன் ரமேஷின் தந்தை ஆர்.பி.செளத்ரி பெரிய தயாரிப்பாளர் என்றபோதும், இந்த படத்திற்கு அவர் சார்பில் எந்தவித பைனான்ஸ் உதவியும் கிடைக்கவில்லையாம். அதோடு, ஜித்தன் ரமேஷின் மார்க்கெட் சரிந்து கிடப்பதால் பைனான்ஸ் கிடைக்காமல் காலவரையறையின்றி படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.