Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலிடம் சண்டை போட்ட த்ரிஷா

24 மே, 2015 - 16:23 IST
எழுத்தின் அளவு:
Thoongavanam-pressmeet-in-hyderabad

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'தூங்காவனம்' படத்தின் முதல் பார்வையை இன்று கமல்ஹாசன் ஹைதராபாத்தில் வெளியிட்டார். இந்தப் படம் தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என்ற பெயரிலும் தனியாக எடுக்கப்படுகிறது. இன்று வெளியிடப்பட்ட மூன்று முதல் பார்வை போஸ்டர்களில் கமல்ஹாசன் மட்டுமே இடம் பெற்றிருந்தார். அதைப் பார்த்ததும் த்ரிஷா கமலிடம் ஏன் என்னுடைய போட்டோ இடம் பெறவில்லை என சண்டை போட்டாராம். இதை கமல்ஹாசனே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


“கமல் சாரிடமிருந்து எனக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரம் இந்தப் படம். இந்த வரத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தர முயற்சிப்பேன். 2008ம் ஆண்டில் அவரிடம் மூன்றாவது உதவி இயக்குனராகச் சேர்ந்தேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இப்போது ஒரு பரீட்சை ஹாலுக்குள் சென்றது போன்று உணர்கிறேன்,” என இயக்குனர் ராஜேஷ் எம்.சிவா தெரிவித்தார்.


“கமல் சாருடன் இரண்டாவது முறை இணைந்து நடிப்பது மிக்க மகிழ்ச்சி. தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் இதற்கு முன் கண்டிப்பாக பண்ணதில்லை. பிரகாஷ்ராஜ் சாருடன் என்னுடைய முதல் தெலுங்குப் படத்தில் நடித்தேன். மீண்டும் அவருடன் நடிப்பதும் மகிழ்ச்சி,” என த்ரிஷா பேசினார்.


கமல்ஹாசன் பேசுகையில், “நானும் படத்தோட ஃபோட்டோ ஷுட்டுக்கு வந்தேனே, உங்க போட்டோ மட்டும் போட்டிருக்கீங்களே என த்ரிஷா கேட்டார். இது முதல் பார்வை மட்டும்தான், இரண்டாவது பார்வையில் உங்களது புகைப்படமும் கண்டிப்பாக வரும் என்று சொன்னேன். போன மாதம் இங்கு வந்த போது பலரும் எப்போது நீங்கள் நேரடித் தெலுங்குப் படத்தில் நடிப்பீர்கள் எனக் கேட்டார்கள். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் நேரடியாகப் படமாக்குகிறோம். அதனால்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் ஆரம்பித்துள்ளேன். எனக்கும் அடிக்கடி தெலுங்குப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைதான். இனி, தொடர்ந்து நேரடித் தெலுங்குப் படங்களில் நடிக்க முயற்சிப்பேன்,” என கமல்ஹாசன் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in