சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
சமூக அக்கறையுடன் ஆழமான கருத்துக்களை திரையில் பதிவு செய்யும் முற்போக்கு மனிதர். உணர்ச்சிப்பூர்வமான பாத்திரங்களை கதை நாயகனாக நடிக்க வைக்கும் இயல்பான இயக்குனர். கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு 'புறம்போக்கு' என்ற கம்யூனிச சிந்தனை படம் இயக்கிய இயக்குனர் ஜனநாதன்
மதுரையில் தினமலர் வாசகர்களுக்காக அளித்த பேட்டி
ஏன் 'புறம்போக்கு' என்று தலைப்பு வைத்தீர்கள் ?
'இயற்கை' என தலைப்பு வைத்தபோது நண்பர்கள், இந்த தலைப்பு எடுபடுமா? என கேட்டனர். 'சிங்கம்', 'சிறுத்தை'என டைட்டில் வைத்துக் கொள்கிறார்கள். அந்த வரிசையில் 'ஈ' யும் இருக்கட்டுமே என்று 'ஈ' தலைப்பு வைத்தேன். 'பேராண்மை' பட டைட்டில் வைத்த போது ஆண் ஆதிக்கம் உள்ளதாக பெண் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இம் மூன்று தலைப்புகளையும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஒரு போராட்டமே நடத்தினேன். ஆனால், 'புறம்போக்கு' என்ற தலைப்பு கொச்சையாக இருந்தாலும் எளிதில் எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஏனென்றால் புறம்போக்கு இயக்குனர் போகிறார் என மக்கள் மத்தியில் 'ரீச்' ஆகிவிடும்.
புறம்போக்கு தலைப்பிற்கும் கதைக்கும் தொடர்புள்ளதா?
ஆம். காலி இடத்திலிருந்து தான் ஒரு ஊர் உருவாகிறது. அதை போல தான் இந்தப் படத்தின் கதை கருவும் உருவாக்கப்பட்டது.
தூக்கு தண்டனை குறித்து உங்கள் கருத்து?
தூக்கு தண்டனை ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் இல்லை. புறம்போக்கு படத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் கோரிக்கை என்ன என்பதை சொல்லியிருக்கிறேன்.
ஆர்யா, ஷாம் மற்றும் விஜய் சேதுபதி ஒத்துழைப்பு எப்படி இருந்தது?
இவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது, அதுவே கதைக்கு பெரிய பக்கபலமாக அமைந்து விட்டது.
தற்போது தமிழ் சினிமா வெளியாகும் முன் பல சிக்கல்கள் ஏற்படுகிறதே?
தமிழ் சினிமா பல பிரச்னைகளை சந்திக்கிறது உண்மை தான். கார்ப்பரேட் கம்பெனிகளின் பிடியில் சிக்கி தவிக்கிறது. 'ஹாலிவுட்', 'பாலிவுட்'டில் தயாரிப்பாளர்கள்- விநியோகஸ்தர்கள் இடையே ஒப்பந்தம் சரியாக செயல்படுகிறது; புரிந்துணர்வு உள்ளது. இந்நிலைஇங்கு இல்லை; மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது அது தான் காரணம்.
அடுத்த படங்களிலும் கம்யூனிச கொள்கை இருக்குமா?