பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கமல்ஹாசன் அடுத்து அவருடைய சொந்தத் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்கும் 'தூங்காவனம்' படத்தின் முதல் பார்வையை ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளதாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் ஆரம்பமாவதாலும் தெலுங்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'உத்தம வில்லன்' படம் தோல்வியடைந்ததையடுத்து அவர் சென்னையில் தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தின் முதல் பார்வை வெளியிடுவதை தவிர்த்திருக்கிறார் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். தமிழில் தூங்காவனம் மற்றும் தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என பெயரிடப்பட்டுள்ள போஸ்டர்களையும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.