இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சித்து பிளஸ் 2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சாந்தினி. முதல் படத்துக்கு பிறகு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு காளிச்ரன், லவ்வர்ஸ், கிராக் படங்களில் நடித்தார். இரண்டாவதாக நடித்த படித்துறை படம் வெளிவரவில்லை. மீண்டும் தமிழில் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தார். அதன் பிறகும் வாய்ப்பு வராததால் மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார்.
என்றாலும் விடா முயற்சியின் பயனாக இப்போது மூன்று தமிழ் டங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் அவரது உதவியாளர் ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கும் வில்அம்பு படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார். வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா இயக்கும் பல்லாண்டு வாழ்க படத்தில் ராகுல் ரவீந்திரன் ஜோடியாக நடிக்கிறார்.