தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து வரும் நைட் ஷோ என்று பெயரிடப்பட்ட பேய் படத்தின் பெயரை பின்னர் மாயா என்று மாற்றினர்.அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள மாயா படத்தில் நெடுஞ்சாலை புகழ் ஆரி நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய இப்படத்தில் நயன்தாரா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரான் யோஹான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையை பிரபல தயாரிப்பாளர் சி.கல்யாண் வாங்கியுள்ளார். தமிழில் வெற்றி பெற்ற படங்களை வாங்கி தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு லாபம் பார்க்கும் கல்யாண் அண்மையில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த உத்தம வில்லன் படத்தை தெலுங்கில் வெளியிட்டார். அப்படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பேயாக நடித்துள்ள மாயா படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையையும் கல்யாண் வாங்கியுள்ளார். இப்படத்தை மையுரி என்ற பெயரில் தெலுங்கில் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.