மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
இந்தியில் பால்கி இயக்கத்தில் வெளியான படம் ஷமிதாப். இந்த படத்தில் அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. ஏற்கனவே பால்கி இந்தியில் இயக்கிய சில படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்திருந்த பால்கி, இளையராஜாவை நேரில் சென்று சந்தித்தாராம். அப்போது, கிடா பூசாரி மகுடி என்ற படத்தின் பாடல் கேசட்டை பார்த்தவர், அந்த பாடல்களை கேட்டாராம்.
அப்போது, அதில் இடம்பெற்ற சின்ன புள்ள என்று தொடங்கும் ஒரு டூயட் பாடல் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். அதனால் அந்த பாடலை தான் அடுத்து இந்தியில் இயக்கும் படத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள இளையராஜாவிடம் அனுமதி கேட்டாராம். அதற்கு இளையராஜாவும் ஓகே சொல்லி விட்டாராம். பால்கி இயக்கும் அடுத்த இந்தி படத்திற்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.