தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் நடித்த ஸ்ருதிஹாசன், அதன்பிறகு 3 படத்தில் தனுசுடன் நடித்தார். அதற்கடுத்து விஷாலுடன் பூஜை படத்தில் நடித்த அவர், தற்போது விஜய்யுடன் புலியில் நடித்துள்ளார். முந்தைய படங்களைப் போன்றே இந்த புலி படத்திலும் ஸ்ருதிஹாசனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினி வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த நிலையில், அடுத்தபடியாக வீரம் சிவா இயக்கத்தில் அஜித்தின் 56வது படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் நடிக்க நயன்தாரா, தமன்னா, சமந்தா உள்பட பல முன்னணி நடிகைகள் போட்டிக்கோதாவில் குதிக்க, எந்தவித முயற்சியும் செய்யாமல் ஸ்ருதிக்கு எளிதாக அஜித் படவாய்ப்பு கிடைத்தது. மேலும், வீரம் படத்தில் அண்ணன் தம்பி பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த டைரக்டர் சிவா, இந்த படத்தில் அண்ணன்-தங்கச்சி பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதோடு தற்போது முதல்கட்டமாக அண்ணன்-தங்கை சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளையே படமாக்கி வருகிறார். அடுத்தகட்டமாகத்தான் அஜித்-ஸ்ருதிஹாசன் இணையும் காட்சிகளை படமாக்கப்போகிறாராம். இருப்பினும், அஜித்தின் தீவிரமான ரசிகையான ஸ்ருதி, அவருடன் தான் நடிக்கப்போகும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக கூறி வருபவர், அஜித் ஒரு நல்ல மனிதர். சூப்பர் ஹீரோ என்றெல்லாம் அஜித்தை ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளி வருகிறார்.