ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒருவர் திரைப்பட நடிகையாக அறிமுகமாகும் போதே அவரைப் பற்றிய கிசுகிசுக்களும், வதந்திகளும் கூடவே அறிமுகமாகிவிடுகின்றன. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரைக்கும் சினிமாவல் எது மாறியதோ இல்லையோ இந்தக் கிசுகிசு மட்டும் மாறவேயில்லை. கடந்த வாரம் முழுவதும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல், திருமணம் என பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன.
தற்போது டோலிவுட்டிலிருந்து ஒரு தகவல் கசிந்து வந்திருக்கிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் அனுஷ்கா அவருடைய காதலரை சமீபத்தில் பிரிந்து விட்டாராம். கடந்த ஒரு வருட காலமாக அனுஷ்கா ஒருவரைக் காதலித்து வந்ததாகவும் அவரை இந்த வருடக் கடைசியில் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், சமீபத்தில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவரை விட்டுப் பிரிந்து விட்டாராம். இதனால், ஏற்கெனவே முடிவெடுத்தபடி திருமணம் செய்வதையும் தள்ளிப் போட்டுவிட்டார் என்கிறார்கள்.
அனுஷ்கா நடித்து விரைவில் “ருத்ரமாதேவி, பாகுபலி” படங்கள் வெளிவர உள்ளன. மேலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் 'இஞ்சி இடுப்பழகி' படத்திலும் நடித்து வருகிறார். வேறு பட வாய்ப்புகள் வராததால் திருமணம் செய்து கொள்வாரா அல்லது இன்னும் கொஞ்ச நாள் காத்திருப்பாரா என டோலிவுட்டில் கொஞ்சம் அதிகமாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.