இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் புகைப்படங்கள் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அப்படங்கள் பாகுபலி படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன. இந்நிலையில் இப்படத்தில் பாகுபலியாக நடித்திருக்கும் நாயகன் பிரபாஸின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ராஜமௌலி பாகுபலி படத்தின் பாடல்கள் வெளியீடு வரும் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட கோலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகின்றது.பாகுபலியாக வெளிவந்திருக்கும் பிரபாஸின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றார். படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். தமிழ்,தெலுங்கு, மலையாளம்,இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.