ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இப்போதெல்லாம் படங்கள் 100 நாள் ஓடுவது என்பது குறிஞ்சி பூ பூக்கிற மாதிரி அபூர்வமானது. 100வது நாள் போஸ்டர் அடித்து ஒட்டுவதற்காகவாவது ஒன்றிரண்டு தியேட்டர்களில் ஓட வேண்டும். அந்த பாக்கியம்கூட பெரும்பாலான படங்களுக்கு கிடைப்பதில்லை. தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்திக், ஐஸ்வர்யா தேவன், ஜெகன் நடித்த அனேகன் படத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 13ந் தேதி வெளியான படம் இன்று 100வது நாளை தொட்டிருக்கிறது.
மாற்றான் தோல்விக்கு பிறகு கே.வி.ஆனந்துக்கு கிடைத்த உற்சாக வெற்றி. தனுஷூக்கு வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு கிடைத்த அடுத்த வெற்றி, பிரமாண்ட படங்களை எடுத்து தோல்விகளையே கண்டுவந்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு கிடைத்த ஸ்பெஷல் வெற்றி, கார்த்திக்கின் ரீ-என்ட்ரிக்கு சரியான தளம் அமைத்துக் கொடுத்த படம். இந்தி நடிகை அமைரா தஸ்தூரை தமிழுக்கு அழைத்து வந்த படம். டங்காமாரி என்ற கானா பாடலாசிரியை அறிமுகப்படுத்திய படம். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்த படம்.
30 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 50 கோடிக்கு மேல் வசூலித்ததாக சொல்கிறார்கள். தமிழ் நாட்டின் பிற நகரங்களில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாலும் ஒரே தியேட்டரில் 100 நாட்களை தொடவில்லை. சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், அபிராமி, சங்கம், பெரம்பூர் எஸ்2, ஏஜிஎஸ் சினிமா, மாயாஜால் வளாகங்களில் 100 நாளை எட்டிப்பிடித்திருக்கிறது.