அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
ராம் சரண் நடிக்கும் புதுப்படமான ப்ரூஸ்லீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல முன்னாள் கதாநாயகியான நதியா நடிக்க உள்ளார் என்பது நினைவிருக்கலாம். அந்த படத்தில் ராம் சரணுக்கு அம்மாவாக நதியா நடிக்கிறார் என்ற செய்தி தற்போது உலா வருகின்றது. நதியா ஏற்கனவே சில படங்களில் அம்மாவாக நடித்து இருக்கிறார். அதனால் இந்த படத்திலும் அம்மாவாக நடிப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ப்ரூஸ்லீயில் ராம் சரணுக்கு அம்மாவாக நதியா நடிக்கவில்லை என்று அந்த படக்குளுவினரே தெரிவித்து விட்டனர். மேலும் நதியாவிற்கு ஒரு பவர்புல் வேடம் என்றும் படத்திற்கு மிகவும் முக்கியமான வேடம் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். நதியா டோலிவுட்டில் மிர்ச்சி படம் மூலம் தனது செகண்ட் இன்னிங்க்சை தொடங்கினார். அதன் பிறகு பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்த வெற்றி படமான அத்தாரிண்டிகி தாரேதியில் ஒரு முக்கியமான கேரக்டரிலும், விக்டரி வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்த திரிஷ்யம் படத்தில் போலீஸ் ஆபீசர் கேரக்டரிலும் நடித்து மறுபடியும் தனகென்று ஒரு முத்திரையை பதித்தவர் நதியா.
இந்த படத்தில் ராம் சரண் ஸ்டண்ட் மேன் கேரக்டரில் நடிக்கிறார். டி.வி.வி. எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக தானைய்யா தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார். இந்த படத்தில் ராம் சரண் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், தங்கையாக கிருதி கந்தர்பா நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளரான தமன் இசை அமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் 15ம் தேதி தசரா பண்டிகையையொட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.