தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்புதேவன் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் 'புலி' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவது உறுதி என அப்படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு, கிராஃபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன் பாங்காக், கம்போடியா ஆகிய இடங்களில் நடைபெற்ற பாடல் படப்பிடிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
ஒரு ஃபேன்டஸியான படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும், மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்றும், குள்ளமான மனிதனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுவரை படத்தின் கதையைப் பற்றி எந்த விஷயமும் லீக் ஆகாமல் உள்ளது. இரண்டு வேடங்களில் நடிப்பது மட்டும் ஏறக்குறைய உறுதி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு ஜோடி என்கிறார்கள்.
விரைவில் இப்படத்தின் முதல் பார்வையையும், தொடர்ந்து டீசரையும் வெளியிட உள்ளார்கள்.