ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வருடம் ஏகப்பட்ட பேய்ப்படங்கள் வெளிவந்தன். அவற்றில் சில படங்களே வெற்றியடைந்தன. அவற்றில் முக்கியமான படங்கள் - எல்ரெட் குமார் தயாரிப்பில் டிகே இயக்கிய யாமிருக்க பயமே, சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம், வினய் நடித்த அரண்மனை, மிஷ்கின் இயக்கிய பிசாசு. இந்த வருடத்தின் துவக்கத்திலேயே இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் கதாநாயகனாக அறிமுகமான டார்லிங் என்ற பேய்ப்படம் வெற்றியடைந்தது. டார்லிங் படத்தை அடுத்து ஏகப்பட்ட பேய்ப்படங்கள் வந்தாலும், கடந்த காலங்களில் வெளியான அத்தனை பேய்ப்படங்களின் வசூலையும் மிஞ்சுகிற வகையில் வெற்றிப்படமானது - காஞ்சனா-2 படம் மட்டுமே.
இப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்து வசூலில் இன்றுவரை சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் ஒரு தியேட்டரில் 4 காட்சி ஓடிய காஞ்சனா -2 படத்தை பகல்காட்சியாக மாற்றிவிட்டு 36 வயதினிலே படத்தை 3 காட்சிகளில் திரையிட்டனர். இரண்டே நாட்களில் 36 வயதினிலே பகல் காட்சியாக மாற்றப்பட்டு, காஞ்சனா-2 படம் 3 காட்சியாக மாற்றப்பட்டது. அந்தளவுக்கு பேய் ஓட்டம் ஓடும் காஞ்சனா 2 படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி.