பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானிற்கு, மூட்டு மாற்று ஆபரேசன் நடைபெற்றது. ஆபரேசன் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், அவர் 3 முதல் 4 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஷாரூக் கானிற்கு ஆபரேசன் செய்த டாக்டர் சஞ்சய் தேசாய் கூறியதாவது, ஷாரூக் கானிற்கு, கடந்த சில மாதங்களாக, கால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் இருந்து வந்தது. படப்பிடிப்புகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த காயங்களினால், மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. வலி அதிகமாகவே, ஆபரேசன் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, ஆபரேசன் வெற்றிகரமாக நடந்தது. தற்போது அவர் சுகமாக இருக்கிறார், இன்னும் சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிடுவார் என்று தேசாய் கூறினார்.