டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜெயா டிவியில் நியூஸ் ரீடராக இருப்பவர் பாத்திமா பாபு. சினிமாவிலும் தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். அதோடு, சென்னையில் நடிப்பு பயிற்சி கொடுக்கும் ஒரு தியேட்டர் கம்பெனியும் அவர் நடத்தி வருகிறார். இதில் புதிதாக நடிப்பு பயில வருபவர்களுக்கு தானே டீச்சிங் கொடுக்கிறார் பாத்திமா பாபு. அதோடு, கோர்ஸ் முடிந்ததும் ஒரு டிராமா அரங்கேற்றம் செய்கிறார். அதை பார்த்து சிறந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதற்கு சிறப்பு விருந்தினர்களை அழைக்கிறார். இப்படி வாரந்தோறும் அவரது தியேட்டர் கம்பெனியில் நடிப்பு போட்டி நடக்கிறதாம்.
அந்தவகையில், மறைந்த கே.பாலசந்தர், பாத்திமாபாபுவின் தியேட்டர் கம்பெனியில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்திருக்கிறாராம். மேலும், வாரந்தோறும் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகர் - நடிகைகளை அழைத்து செல்கிறார் பாத்திமாபாபு. சமீபத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் நடிகர்கள் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்களாம்.
மேலும், தனது தியேட்டர் கம்பெனியில் நடிப்பு பயிற்சி பெற வருபவர்களுக்கு சினிமா சான்சும் வாங்கித்தருகிறாராம் பாத்திமாபாபு. அவருக்கு சினிமாவில் நல்ல தொடர்பு இருப்பதால், அவரது பயிற்சி கூடத்தில் பயின்றால், எளிதில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று புதிதாக வருபவர்கள் பலரும் பாத்திமா பாபுவிடம் நடிப்பு பயிற்சி பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.