நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
நாய்கள் ஜாக்கிரதை வெற்றிக்கு பிறகு சிபிராஜ் நடிக்கும் படம் ஜாக்சன் துரை. ஸ்ரீகிரீன் புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரிக்கிறார். சிபிராஜூடன் பிந்து மாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன், நடிக்கிறார்கள். தரணிதரன் இயக்குகிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார்.
"இது தமிழில் தயாராகும் முதல் பீரியாடிக்கல் திகில் கதை. இதில் ஜாக்சன் துரையாக நடிப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸச்சேரி. கன்ஜாய்ரிங் திகில் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலி மற்றும் ஒப்பனை தொழிநுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. கதை 1940ல் நடைபெறுவதால் அந்தக் காலம் போன்ற பிரமாண்ட அரங்குகள், அமைத்து படமாக்கப்படுகிறது. காமெடியும், திகிலும் கலந்த கதை" என்றார் இயக்குனர் தரணிதரன்.