'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
புதிய இசைக்கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசைப்பள்ளி நடத்தி வருகிறார். அவரது இசைப்பள்ளியில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு புதிய இசையமைப்பாளர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக யு1 ரெக்கார்ட்ஸ் என்ற பெயரில் ஒரு ஆடியோ நிறுவனத்தையும், யு டியூப் வீடியோ சேனல் ஒன்றினையும் தொடங்கியுள்ளார். இதன்மூலமாக தனது தனித்திறமையை வெளிப்படுத்தும் ஆல்பங்களை தொடர்ந்து வெளியிடப்போகிறாராம் யுவன்.
அதோடு, தனது ஆல்பங்கள் மட்டுமின்றி, நல்ல திறமையான புதிய வரவு இசையமைப்பாளர்களின் ஆல்பங்களையும் இந்த நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு அவர்களுக்கு நல்லதொரு அறிமுகத்தை கொடுக்கப்போகிறாராம். மேலும், இந்த யு1 யு டியூப் சேனலில் தான் இசையமைத்து வெளிவராத படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் வெளியிடுகிறாராம் யுவன் ஷங்கர்ராஜா.