600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கடந்த ஆண்டு மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து வெளியான படம் ஹவ் ஓல்டு ஆர் யூ. இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருந்தார். அப்படத்துக்கு கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மஞ்சு வாரியரின் ரீ-என்ட்ரிக்கு அப்படம் பெரிய அடித்தளம் போட்டுக்கொடுத்தது.
அதனால், அதே படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தால் தனது ரீ-என்ட்ரியும் பெரிய திருப்புமுனையாக அமையும் என்றுதான் ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ரீமேக்கான 36 வயதினிலே படத்தில் நடித்தார் ஜோதிகா. வேறு டைரக்டர்கள் இயக்கினால் கதையை மாற்றி விடுவார்கள் என்பதால் அந்த படத்தை இயக்கிய ரோஷனையை தமிழிலும் இயக்க வைத்தனர்.
தற்போது படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட நாளைக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் என்பதால் அவரை பார்க்கவே ஒரு கூட்டம் தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், மலையாளத்தில் ஏற்கனவே வெளியான படமே தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், இப்படத்தை பார்க்க கேரளாவிலுள்ள தியேட்டர்களிலும் கூட்டம் வருகிறதாம். ஆனால், இந்த அளவுக்கு அங்கு வரவேற்பு இருக்கும் என்பதை எதிர்பார்க்காததால் குறைவான தியேட்டர்களிலேயே 36 வயதினிலே வெளியாகியிருக்கிறதாம்.