'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
மலையாளத்தில் சாதாரண ஒரு படமாகத்தான் உருவானது 'லாவண்டர்' என்கிற படம்.. படத்தின் கதையை எழுதியுள்ள அனூப் மேனன் ஓரளவு பிரபலமான முகம் என்றாலும் படத்தின் இயக்குனர் அட்லஸ் அலி புதியவர் தான். படத்தில் மெயின் ஹீரோக்கள் என யாரும் இல்லை.. ஆனால் நம் தமிழுக்கு தெரிந்த முகங்களான ரகுமானும் தலைவாசல் விஜய்யும் இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். காமெடிக்கு அஜு வர்கீஸ் இருக்கிறார்.
இந்த சமயம் தான் ரகுமானுக்கு சூர்யா தனது நன்றிக்கடன் தீர்க்கும் நேரம் என்றுகூட சொல்லலாம்.. காரணம் சிங்கம்-2 படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்து அவருடன் நட்பானார் ரகுமான், அந்த நட்பின் பேரில் தான் தனது தயாரிப்பான '36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவுக்கு கணவராக நடிக்க ரகுமானை அணுகினார் சூர்யா. அவரும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டார். அதேபோல அந்தப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வரை வந்து கலந்துகொண்டார் ரகுமான்.
இப்போது ரகுமான் தான் நடித்துள்ள மலையாளப்படமான 'லாவண்டர்' புரமோஷன் நிகழ்ச்சிக்கு மரியாதையை நிமித்தம் சூர்யாவை அழைக்க, எந்த மறுப்பும் சொல்லாமல் வர ஒப்புக்கொண்டாராம் சூர்யா.. வரும் மே-25ஆம் தேதி கொச்சி லுலு மகாலில் நடைபெறவுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் சூர்யா.