தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் மகன் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். தமிழில் குரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மோகன் பாபு. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார். இவரது மகனும், டோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகருமான மஞ்சு மனோஜூக்கும், ப்ரணதி என்பவருக்கும் இன்று திருமணம். மகனின் திருமணத்திற்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரை அழைத்திருந்தார் மோகன் பாபு. பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் திருமண அழைப்பு கொடுத்திருந்தார் மோகன் பாபு.
திருமணத்திற்கு முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நடிகைகள் த்ரிஷா, ஹன்சிகா, நடிகர் விக்ரம் பிரபு, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட நிறைய தமிழ் மற்றும் தெலுங்கு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஐதராபாத்தில் இன்று பிரமாண்ட முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்றார். மோகன் பாபுவும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். இருவரது இல்ல விழாக்களிலும் இருவரும், இருவரது குடும்பமும் பங்கேற்கும். அதன்படி ரஜினி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்று திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் ரஜினி.