Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஸ்கலாக மாற ரஜினியால் முடியுமா..?

20 மே, 2015 - 13:23 IST
எழுத்தின் அளவு:
Will-possible-for-acting-rajini-in-baskar-the-rascal

மலையாள இயக்குனர் சித்திக்கின் படம் ரிலீசாவதை மலையாள திரையுலகை விட மற்ற மொழிகளில் உள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தான் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். காரணம் தமிழில் 'ஃப்ரெண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', 'காவலன்'னு சூப்பர்ஹிட் படங்களை தந்தவர்தான் சித்திக். இவை அவர் ஏற்கனவே இயக்கிய மலையாள படங்களின் ரீமேக் தான். குறிப்பாக இவரது பாடிகார்டு படம் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் ரீமேக்காகி பட்டையை கிளப்பியது.


அதனாலேயே சமீபத்தில் இவரது இயக்கத்தில் மம்முட்டி நடித்து வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படமும் தமிழ் உட்பட மற்ற மொழிகளில் ரீமேக் ஆகலாம் என்கிற பேச்சு எழுந்துள்ள்ளது. குறிப்பாக இந்தப்படத்தின் ரீமேக்கில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.. ஆனால் ரஜினியால் அந்த பாஸ்கர் என்கிற ராஸ்கல் கேரக்டராக மாறமுடியாது என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள். அப்படியே அவர் மாறினாலும் ரசிகர்கள் அதை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் சந்தேகம் தான் என்று சொல்கிறார்கள்.


காரணம் ரஜினி பண்ணும்படியாக அதில் அதிரடி ஆக்சன் கிடையாது.. படத்தில் மம்முட்டியின் ஒரு சில செயல்கள் தான் காமெடியாக இருக்குமே தவிர, அவர் இறங்கி காமெடி பண்ணவில்லை.. கிட்டத்தட்ட எங்கள் அண்ணா விஜயகாந்த் மாதிரி தான் இந்த கேரக்டரும். இதுபோக ஏற்கனவே இன்னொருவரின் மனைவியான நயன்தாராவை மம்முட்டி திருமணம் செய்வது போலத்தான் படம் முழுவதும் காட்சிகள் இருக்கின்றன.


மேலும் குழந்தைகளை முன் வைத்தே முழுப்படமும் நகரும்.. இந்தக்காரணங்களால் இது ரஜினிக்கு செட்டாக கூடிய கதை இல்லை என்கிறார்கள். அப்படியே ரஜினிக்காக கதையை மாற்றினாலும் அது வேறுவிதமாக மாறி ஒரிஜினல் தொலைந்துபோகும் என்றும் சொல்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். அதுமட்டுமல்ல, இதற்கு முன்னாள் மம்முட்டி நடித்த 'கத பறயும்போல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் மம்முட்டி கேரக்டரில் ரஜினி நடித்தது எடுபடாமல் போனதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in