வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
திரை உலகில் தன் தாய் மொழியில் சாதித்த நாயகிகளைக் காட்டிலும் பிற மொழிப் படங்களில் சாதித்த நடிகைகளே ஏராளம். அதுவும் இந்தி நடிகை என்றால் டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தைரியமாக களம் இறங்கலாம். அந்த வகையில் வடக்கே இருந்து டோலிவுட்டில் மையம் கொள்ள வரும் அழகு புயல் இஷா குப்தாவை வரவேற்க தெலுங்கு திரை ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பல இந்தி படங்களில் நடித்துள்ள இஷா குப்தா, தெலுங்கில் சச்சின் ஜோஷி தயாரித்து நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எஸ்.எம்.எஸ், சங்கரா, பீமிழி கபட்டி ஜட்டு போன்ற படங்களை இயக்கிய சத்யா இப்படத்தை இயக்கவுள்ளார். இம்மாதம் 27 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழிலும் திரைக்கு வரும் என்று கூறப்படுகின்றது.