Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமண வதந்தி, நயன்தாராவின் பப்ளிசிட்டி நாடகமா ?

20 மே, 2015 - 10:48 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-Wedding-rumour-is-publicity

தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு மிகவும் பிஸியான நடிகை நயன்தாரா மட்டுமே. கடந்த சில நாட்களாகவே செய்திகளில் பரபரப்பாக அடிபட்டு வரும் நயன்தாரா, பரபரப்பாக படப்பிடிப்பில் கலந்து கொண்டும் வருகிறார். நயன்தாராவின் 2015ம் ஆண்டிற்கான இன்னிங்ஸ் அடுத்த வாரம் மாஸ் படம் மூலம் ஆரம்பமாக உள்ளது. இதற்கடுத்து தொடர்ச்சியாக அவர் நடித்துள்ள படங்கள் மாதத்திற்கு ஒன்றாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்போதும் பல புதிய படங்களில் நடிப்பதற்கு நயன்தாராவை பல இயக்குனர்கள் அணுகி வருகிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்போது நயன்தாரா ஒரே நேரத்தில் மாறி மாறி மூன்று படங்களில் நடித்து வருகிறாராம். கார்த்தி ஜோடியாக காஷ்மோரா படத்திலும், விஜய் சேதுபதி ஜோடியாக நானும் ரௌடிதான் படத்திலும், ஜீவா ஜோடியாக திருநாள் படத்திலும் நடிக்க மாறி மாறி கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.


இதனிடையே, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே வெளியான திருமணச் செய்தி விவகாரம் பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், நானும் ரௌடிதான் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நாயகி நயன்தாராவும் இப்போதே அதைச் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.


ஆனால், தன்னுடைய முன்னாள் காதலர்களை வெறுப்பேற்றவே இப்படி ஒரு நாடகத்தை நயன்தாரா அரங்கேற்றி வருகிறார் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். எந்த விழாவிலும் கலந்து கொள்ள விரும்பாத நயன்தாரா தன்னைப் பற்றிய செய்திகள் மட்டும் மீடியாக்களில் வரவேண்டும் என அவருடைய நெருங்கிய சில மலையாளப் பத்திரிகையாளர்கள் மூலமே இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விடுகிறார் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் மட்டுமே நயன்தாராவைத் தொடர்பு கொள்ள முடியுமாம். தமிழ்ப் பத்திரிகையாளர்களை நயன்தாரா மதிக்கவே மாட்டார் என்றும் கோலிவுட்டில் சிலர் தெரிவிக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in