'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சென்னை 28, சரோஜா, தோழா என பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படி அவர் நடித்த சில படங்கள் திரைக்கே வரவில்லை. மீறி வெளியான படங்களோ ஓடவில்லை. அதனால் மறுபடியும் கேரக்டர் நடிகரானார் நிதின் சத்யா.
அந்த வகையில், பிரியாணி, என்ன சத்தம் இந்த நேரம், அரண்மனை, திருடன் போலீஸ் போன்ற படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்த நிதின் சத்யா, இப்போது நாங்க ரொம்ப நல்லவங்க என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் தொடக்கத்தில் இருந்து என்ட் கார்டு போடும் வரை தியேட்டருக்கு வருபவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கதையில் உருவாகியிருக்கிறதாம். அதனால், நாங்க ரொம்ப நல்லவங்க படம் தனது கதாநாயகன் பிரவேசத்துக்கு மறுவாழ்வு கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் நிதின் சத்யா.