‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சமீபகாலமாக முன்னாள் இயக்குனர்கள் பெரும்பாலானோர் நடிகர்களாகி விட்டனர். அந்த வகையில், வாலி, குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே பல படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்ததும் அவரும் கேரக்டர் நடிகராகி விட்டார்.
அந்தவகையில், ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். அதையடுத்து இசை என்ற படத்தை இயக்கி நடித்த எஸ்.ஜே. சூர்யா, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படத்தில் ஒரு பாடலில் ஆட்டோ டிரைவராக தோன்றி நடனமாடியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து இப்போது விக்னேஷ் நடித்துள்ள அவன் அவள் படத்தை இயக்கியிருக்கும் ராம்கிருஷ் மிர்னாலி என்ற இயக்குனரும், கிடா பூசாரி மகுடி என்ற படத்துக்காக இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ஒரு காலத்துல என்று தொடங்கும் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.