தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் 98வது படமான லயன் அண்மையில் வெளிவந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றது. அப்படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா தனது 99வது படமாக டிக்டேட்டர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கவுள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணாவின் 100வது படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை லெஜெண்ட் எனும் வெற்றி படத்தை இயக்கிய பூபதி ஸ்ரீனு இயக்கவுள்ளார். பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கிய லெஜெண்ட் படம் 400 நாட்களைக் கடந்து இன்றும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. பாலகிருஷ்ணாவுடன் இணைந்து சிம்ஹா லெஜெண்ட் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி ஸ்ரீனு மீண்டும் அவரது 100வது படத்தில் இணையவுள்ளார். இதனை உறுதி செய்துள்ள பாலகிருஷ்ணா பூபதி ஸ்ரீனுவிடம் இப்படத்தின் திரைக்கதையை அமைக்க கூறியுள்ளாராம். அடுத்த வருடம் இப்படம் திரைக்கு வரும் என தெரிகிறது.