‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தற்போது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் படம் சூர்யா நடிக்கும் மாஸ் படம்தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா என இரண்டு நாயகிகள் நடித்திருக்கிறார்கள். வித்தியாசமான வேடங்களில் பிரேம்ஜி அமரன், சமுத்திரக்கனி, பார்த்திபன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் 'மாஸ்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரும்ப வருவேன்னு எதிர்பார்க்கலை இல்லை? அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலை இல்லை? என்ற பன்ச் டயலாக்கோடு வெளியிடப்பட்ட மாஸ் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்காக்கிவிட்டது. மே 1 பிறகு மே 15 தேதிகளில் மாஸ் படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. தெலுங்குப் படத்தின் ட்ராக்குக்கு தமன் இசையமைத்துக் கொடுத்த பாடல் மாஸ் படத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியது. அந்தப் பாடலுக்கு ரைட்ஸ் தர மாட்டேன் என தெலுங்குப்பட தயாரிப்பாளர் சொன்னதால் கடைசியில் அந்தப் பாடலையே படத்திலிருந்து நீக்கிவிட்டனர்.
அதன் காரணமாக மாஸ் படத்துக்கான தடைகள் நீங்க, 'மாஸ்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உலகமெங்கும் ரிலீஸாகிறது. மாஸ் படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'ரக்ஷுடு' படத்தின் பாடல்கள் நேற்று (ஏப்ரல் 18) ஆந்திராவில் வெளியாகவிருக்கின்றன. தமிழைப்போல தெலுங்கிலும் சூர்யாவிற்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் மாஸ் தெலுங்கு டப்பிங் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.