அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை இன்றைய இளம் கதாநாயகிகளில் நமீதா பிரமோத் பக்கம் அதிர்ஷ்ட காற்று நன்றாகவே வீசுகிறது. சமீபத்தில் திலீப்புடன் இணைந்து நடித்த 'சந்திரேட்டன் எவிடயா' படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடித்திருந்தார் நமீதா பிரமோத். இந்தப்படத்தில் ஷூட்டிங்கின் முதல் நாள் மட்டுமே பயிற்சி பெற்ற இவர், மறுநாள் படப்பிடிப்பின்போது ஒரு தேர்ந்த பரதநாட்டிய டான்சர் போல அசத்தலாக ஆடினாராம்.
எப்படி இது சாத்தியம் என்று கேட்டால், “சில வருடங்களுக்கு முன் பரதநாட்டியம் கற்றுக்கொள்வதற்காக சென்றேன். ஆனால் ஆரம்பகட்ட பயிற்சிகளுடன் விட்டுவிட்டேன். ஆனால் இன்று படத்திற்காக ஆடவேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது அந்த ஆரம்பகட்ட பயிற்சி நிறையவே கைகொடுத்தது” என்கிற நமீதா பிரமோத், அடுத்து பிருத்விராஜுடன் இணைந்து நடிக்கும் 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் சினிமா டான்சராக நடிக்கிறாராம். இது எப்டி இருக்கு..?