'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
தன் காதல் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. தனது 2டி நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ''36 வயதினிலே'' படத்தை தயாரித்துள்ளார். மலையாளத்தில் வௌியான ''ஹவ் ஓல்டு ஆர் யூ'' படத்தின் ரீ-மேக்கான இப்படம், கடந்த வௌ்ளிக்கிழமை ரிலீஸானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு கிடைத்த ரீ-என்ட்ரி சிறப்பாக அமைந்திருப்பதால் ஜோதிகா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். ஜோதிகா மட்டுமல்லாது இப்படத்தை தயாரித்த சூர்யாவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 36 வயதினிலே படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என்னை நெகிழ செய்கிறது. இனி தொடர்ந்து இது போன்ற நல்ல நல்ல படங்களை என்னுடைய 2டி நிறுவனம் கொடுக்கும். ரசிகர்கள், மீடியாக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று சூர்யா கூறியுள்ளார்.